Others
மேல்விஷாரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது…
மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட 4.வது வார்டு. 11வது வார்டு 12வது வார்டு பொதுமக்களுக்கு மேல்விஷாரம் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மகளிர் உரிமை தொகை, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர் இந்நிகழ்ச்சியை நகர மன்ற தலைவர் எஸ். குல்சார் அஹமத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக தீர்வு செய்ய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார் மேலும்
இந்நிகழ்வில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், S.ஜபர் அஹமத்,
மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் .
