fbpx
Others

மூளையைத் தின்னும் அமீபா வைரஸ்–தமிழ்நாட்டில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை..

கேரளாவில்  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த வைரஸ் பாதிப்பதால் 3 மாத ஆண் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒமசேரி பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக்கின் 3 மாத ஆண் குழந்தைக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்பு அமீபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.சிகிச்சைப் பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதேபோன்று, கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட கப்பில் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான ரமலா என்ற பெண்மணி அமீபா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில்மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு குளித்தபோது அமீபா வைரஸ் பாதிப்புக்கு ஆளானதாகவும், குளத்தில் அமீபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்துகுளத்தைபயன்படுத்ததடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்,ஒரேமாதத்தில்அமீபாதொற்றால்உயிரிழந்தோர்எண்ணிக்கை3ஆகஉயர்ந்துள்ளது.இந்நிலையில், கேரளாவில் மூளை திண்ணும் அமீபா நோய் பரவல் எதிரொலியாக, தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் நட்சத்திர விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீச்சல் குளங்களில் நாளொன்றுக்கு இரண்டு முறை தண்ணீரை மாற்ற வேண்டும், குளோரின் தெளித்து சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற நீச்சல் குள உரிமையாளர்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close