Others
மூத்த குடிமக்கள் கவனத்துக்கு இலவச பஸ் டோக்கன்.

சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக்கூடிய கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. இது ஜூலை 31-ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பஸ்பயணடோக்கன்கள் கொடுக்கப்படும். ஆதார் மற்றும் ரேஷன் கார்டை வைத்து டோக்கன்களை பெறலாம்.