மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை..

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 28-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 3,725 பேர் உயிரிழந்தனர். பாரம்பரிய கட்டிடங்கள்எல்லாம்இடிந்தன.நிலநடுக்கம்பாதித்தபகுதிகளில்விரைவில்மறுவாழ்வுபணிகள்மேற்கொள்ளப்படும்எனராணுவத்தலைவர்உறுதியளித்துள்ளர்.இந்நிலையில் மியான்மரில் பர்மிய புத்தாண்டு திங்யான் கடந்த 13-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மியான்மரில் புத்தாண்டு விடுமுறையில் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு, அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி சிறையில் இருந்து விடுவிக்க ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் உத்தரவிட்டார். வெளிநாட்டு கைதிகள் 13 பேரும் விடுவிக்கப்பட்டு, அவர்களது நாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் சட்டத்தை மீறினால், அவர்கள் புது தண்டனையுடன், பழைய வழக்கில் மீதுமுள்ள தண்டனையை சேர்த்து அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.கொடிய குற்றங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவிர மற்றவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டது. யாங்கூன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை சிறை வாசலில் குடும்பத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.ஆங்சான்சூகிஉட்படஅரசியல்கைதிகள்22,197பேர்இன்னும்மியான்மர்சிறைகளில்உள்ளனர்.மியான்மரில்புத்தாண்டுவிடுமுறையிலும்,ராணுவத்துக்கும்,ஜனநாயகஆதரவுபடையினருக்கும்இடையேமோதல்கள்தொடர்ந்துநடைபெற்றுவருகின்றன. ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை தெரியவில்லை.