மிகபெரிய சட்ட சிக்கல் விஜய்க்கு ஏற்படுமா…? ஓர் அலசல்..?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த 3 நாட்களாக வீட்டில் இருக்கிறார், பனையூரில் வீட்டில் இருக்கும் அவர் நேற்று மற்றும் நேற்று முதல்நாள் வீட்டில் என்ன செய்து கொண்டு இருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.கடந்த இரண்டு நாட்களாக அவர் அரசியல் ரீதியாக நிறைய பேரிடம் பேசி உள்ளார். கூட இருக்கும் யாருக்கும் இந்த விவகாரத்தை கையாள தெரியவில்லை என்ற கோபம் விஜயிடம் உள்ளது.புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். அதை தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் அருண், ராஜ்மோகன், ஜான் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். ஆதவ் அர்ஜுனா பிரச்னையை குறைக்காமல் கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சனையை அதிகரிக்கும் வகையில் போஸ்டுகளை செய்கிறார். இப்படி அவர்கள் என்ன செய்வது என்று ஐடியா இல்லாமல் இருப்பதால் விஜய் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தவெக தாண்டி வெளியே பலரிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறாராம். வெளியே உள்ள அரசியல் நிர்வாகிகளுடன் ஆலோசனை கேட்டு இருக்கிறாராம்.விஜய் பாஜக வழியாக சிலரிடம் பேச முயன்றார். ஆனால் அது தமிழக அரசிடம் எடுபடவில்லை. அதாவது விஜயின் தூதுகளை விஜய் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக ராகுல் காந்தி வழியாக விஜய் முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளாராம். அவர் ராகுல் காந்தியிடம் சிலர் வழியாக பேசி உள்ளார். அதில்.. எனக்கு உங்கள் உதவி வேண்டும்.. என்னுடைய பெயர் FIRல் வரக்கூடாது. நிலைமை கைமீறி
சென்றுவிட்டது. ஸ்டாலினிடம் பேசுங்கள்.. இதை சரி செய்ய வேண்டும்.. அதற்கான உதவிகளை செய்யுங்கள், என்று ராகுல் காந்தி வழியாகவிஜய்கோரிக்கைவிடுத்துஇருக்கிறார். ஆனால் திமுக தரப்பு சட்டப்படிதான் செல்வோம்.. கட்சி பொதுச்செயலாளர் என்ற பெயரில் புஸ்ஸி ஆனந்த் மீது FIR போட்டுள்ளோம்.. சட்டப்படி கோர்ட் சொல்வதையே செய்வோம் என்று உறுதியாக உள்ளதாம்.இதில் விஜய் கைதாகும் வாய்ப்புகளும் உள்ளன. விஜய்க்கு பெரிய அளவில் அரசியல் ஆதரவு, பெரிய அளவில் வழக்கறிஞர்கள் படை சப்போர்ட் இல்லை என்றால், கண்டிப்பாக மிகபெரிய சட்ட சிக்கல் விஜய்க்கு ஏற்படும். இதனால் விஜய் டெல்லி ஆதரவை நாடி உள்ளாராம். இந்த விவகாரத்தை திமுகவிற்கு எதிராக திருப்பலாமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறதாம் டெல்லி. ஏதாவது ஒரு இடத்தில் இதை வைத்து திமுகவிற்கு செக் வைத்தால் அது செந்தில் பாலாஜிக்கு சரிவாக அமையும் என்பதால்.. அதற்கான திட்டத்தில் டெல்லியும் இருக்கிறதாம். இதனால் விஜய் டெல்லியுடன் கைகோர்க்கலாம் என்கிறார்கள்.ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பின் சதி வேலை நடந்திருப்பதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய தசரா விடுமுறைக் கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர்எஸ்.அறிவழகன்,செப்டம்பர்28,2025ஞாயிற்றுக்கிழமைஅன்றுசென்னைநீதிபதி தண்டபாணிஇல்லத்தில்விடுத்தகோரிக்கையைத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதனால் பல சட்ட ஆலோசகர்களுடன் விஜய் பேசி வருவதாக கூறப்படுகிறது.அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கரூர் விரைந்தனர். ஆனால் விஜய் தற்போது வரை கரூர் செல்லவில்லை.இடைப்பட்ட இரண்டு மணி நேரத்தில் விஜய் தனது கூட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களையும் சந்திக்காமல் புறக்கணித்துச் சென்றார். சென்னை சென்றதும் நடந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் மட்டுமே இரங்கல் தெரிவித்தார். அடுத்த நாள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அதோடு விஜய்யின் பதிவுகள் நின்றுபோனது.சம்பவம் நடந்து நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை கரூர் பகுதிக்கு விஜய் செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வழக்கமான கட்சி நிகழ்ச்சி தொடர்பாக வீடியோ வெளியிடும் விஜய் இந்த முறை நேரில் சென்றால் பிரச்சினையாகும் என்று உணர்ந்திருந்தாலும் குறைந்தபட்சம் இரங்கல் தெரிவித்து ஒரு வீடியோவாவது வெளியிட்டு இருக்கலாம்.அதுவும் செய்யவில்லை. அல்லது தவெகவின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகளாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து இரங்கல் தெரிவித்து இருக்கலாம். அதுவும் நடக்கவில்லை. இப்படியாக திருச்சியில் முதல் வாரப் பிரச்சாரத்தில் இருந்து தற்போது வரை விஜய்யின் அரசியல் நிகழ்வுகள் பெரும் குழப்பமாகவும் கண்டிக்கத்தக்க வகையிலுமே இருக்கின்றன. இது விஜய்யின் கவனத்திற்கு செல்லவில்லை எனச் சொல்லப்பட்டாலும் அதனைக் கூட சரி செய்யாதது விஜய்யின் மிகப்பெரும் தவறு. இதே நிலை தொடர்ந்தால் விஜய் மேலும் பல விமர்சனங்களுக்கு ஆட்பட வேண்டியதுதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.