fbpx
Others

மாநிலங்களவை உறுப்பினர்களாக 4பேரும்பதவியேற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர்  பதவியேற்பு | 4 people from Tamil Nadu, including Kamal Haasan, take oath as  Rajya Sabha members - hindutamil.inதமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம். அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது.காலியாக இருந்த 6 இடங்களுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுகவின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 4 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம்.அந்த வகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுதி அளித்ததைப் போல, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மக்கள் நீதிKamal Haasan Rajya Sabha oath மய்யத்திற்குக் கொடுக்கப்பட்டது. இதற்கு கமல்ஹாசனை அக்கட்சியினர் ஒருமனதாகத் தேர்வு செய்தனர். அதுபோல, மற்ற 3 பதவிகளுக்கு திமுக சார்பில் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம், பி. வில்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த4பேரும்இன்றுமாநிலங்களவைஉறுப்பினர்களாகப்பதவியேற்றனர்.  இதையடுத்து அவர்கள் அவையை நடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் வாழ்த்துகளைப் பெற்றனர். 4 பேரும் தமிழிலேய உறுதிமொழி ஏற்றனர். அப்போது கமல்ஹாசன் தனது உறுதிமொழி வாசிப்பில், “மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் தமிழ்நாடு அரசியல்: கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியை நெருங்குகிறாரா? - BBC News  தமிழ்ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன்” எனத் தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டார்.கமல்ஹாசன் தனது உறுதிமொழியில் “விழுமிய முறைமையுடன்” எனக் குறிப்பிட்டிருந்தாரே, அப்படி என்றால் என்ன எனப் பலர் இணையத்தில் தேடி வருகிறார்கள். “விழுமியம்” என்றால் ஒரு தனிமனிதன் அல்லது சமூகத்தின் நம்பிக்கைகள், கருத்துகள், கொள்கைகள் மற்றும் நடத்தைகள் ஆகும். விழுமியங்கள் ஒரு நபரின் வாழ்க்கையை வழிநடத்துகின்றன, மேலும் அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வழிகாட்டியாக உள்ளன.அதாவது மதிப்புடன், முறையாக என்ற பொருளும் உண்டு. ஒரு செயல் அல்லது நடத்தையைச் செய்யும்போது, அந்தச் செயல் அல்லது நடத்தையை ஒரு குறிப்பிட்ட விழுமியத்தின் அடிப்படையில், முறையாக, ஒழுக்கத்துடன் செய்வது ஆகும். அதாவது தனிமனித ஒழுக்க, சமூக விழுமியங்கள், நடத்தை ஆகியவற்றை குறிக்கிறது.இந்த விழுமியத்தின் முக்கியத்துவம் என்னவெனில், சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட உதவுகின்றன, தனிமனித ஒழுக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன, சமூகத்தில் நேர்மை மற்றும் நம்பிக்கையை வளர்க்க உதவுகின்றன, சமூக மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், விழுமிய முறைமை என்பது ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க நான் முக்கியப் பங்காற்றுவேன் என்பதாகும்.

Related Articles

Back to top button
Close
Close