fbpx
Others

மாதவரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிராம நிர்வாக அதிகாரிகளின் பணிச்சுமையை அதிகரிக்கும் தமிழக அரசை கண்டித்து மாதவரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

செப்-19- கடந்த 08-01- 2024 அன்று வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் வருவாய் துறை செயலர் மற்றும் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கொடுக்கப்பட்ட கூட்ட நடவடிக்கைகளின் எழுத்துப்பூர்வமான உறுதி மொழியை ஏற்று தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வைக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து 15- 08 -2024 மற்றும் 19-08 -2024 வரையிலும் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.  டிஜிட்டல் கிராப் சர்வே பணியை செப்டம்பர் மாதம் வரையிலும் காரீப் பருவத்திற்கு கால அவகாசம் இருந்தும் மாவட்டங்களுக்கு இடையில் ஏதோ ஓட்டப்பந்தயம் நடப்பது போல் உயர் அலுவலர்கள் என நினைத்து பட்டியலில் முதலிடத்தை பிடிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து வந்துள்ளதை அந்தந்த சங்கங்கள் வாயிலாக தங்கள் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்துள்ளோம் இருப்பினும் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட நிர்வாகிகளுக்கு இது குறித்து எவ்வித சுற்றறிக்கையும் கொடுக்கப்படாமல் பழைய நிலையிலேயே தொடர்வது என்பது மிகவும் வருந்தத்தக்கதாகவே உள்ளது.மேலும் கடந்த 08-01- 2024 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை மேற்கொள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் (டேப்லெட் பிசி) மற்றும் ஒரு பதிவிற்கு ரூபாய் 10- என்ற வகையில் மதிப்பூதியம் வழங்கப்படும் எனஅளித்தஉறுதிமொழியில் இதுவரை இதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது துறைத் தலைமை மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது.சென்ற மாதம் வரை அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் கிராப் சர்வே பணியானது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மனரீதியான மற்றும் உடல் ரீதியான பல பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறோம். அதிக பரப்பளவை கொண்ட கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றுத்திறனாளி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் 50 வயதை கடந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் 08 -01- 2024 அன்றைய பேச்சு வார்த்தையில் உறுதி அளித்தவாறு உள்ளூர் கணக்கெடுப்பாளர்களை நியமித்து பணியை மேற்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் மதிப்பூதியம் விடுவிக்கப்படாததால் அப்பணிக்கு வருவதை தவிர்த்துவிட்டனர்.என்பதைஇங்குதங்கள்கவனத்திற்குகொண்டுவரவிழைகிறோம்.  கடந்த 08-08- 2024 அன்று நடந்த அனைத்து மாவட்ட அலுவலர்களும் கிராம நிர்வாக அலுவலர்களும் மற்றும் வேளாண் அலுவலர்களும் கலந்து கொண்ட காணொளி கூட்டத்தில் பேசிய வேளாண் அலுவலர் ஒருவர் அதுதான் அமோன்ட் ரிலீஸ் பண்ணியாச்சுல்ல வேலை செய்ய வேண்டியது தானே எனவும் மொபைல் செயலில் சரியான சர்வே எண் காண்பிக்காவிட்டால் என்ன உங்களுக்குத்தான் சரியான சர்வே எண் தெரியுமே பதிவு செய்ய வேண்டியது தானே எனவும் நீங்கள் செய்த பதிவுகள் 80- சதவீதம் தவறு எனவும் பொறுப்பெற்ற முறையில் பேசியது குறித்து மிகுந்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் டிஜிட்டல் கிராப் சர்வே செயலியில் இதுவரை மேற்கொண்ட எந்தவிதமான பதிவுகளை பார்வையிடவோ அதிலிருந்து பயிர்வாரியான பரப்பு குறித்த அறிக்கை எதையும் பதிவிறக்கம் செய்யும்படியாகவோ இல்லை மேலும் இந்த மொபைல் செயலியில் உள்ள குறைகளை களைய பலமுறை கோரிக்கை வைத்தும் அது சம்பந்தமான எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை இன்னும் மேம்படுத்தப்படாமல் ஒத்திகை நிலையிலேயே செயலியை வைப்பது இது திட்டத்தை நீர்த்துப்போக செய்யும் பணியாகவே கருத வேண்டி உள்ளது.இவ்வாறாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் (டேப்லெட் பிசி) இன்றியும் மதிப்பூதியும் எதுமின்றியும் முழுமையான வடிவம் பெறாமல் இருக்கும் டிஜிட்டல் கிராப் சர்வே செயலி மூலமாக பதிவு செய்ய சொல்வது ஏற்கனவே பெரும் பணிச்சுமையில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இதன் மூலம் மென்மேலும் பணிச்சுமையை ஏற்றுவது ஏற்றுக்கொள்ள இயலாது என்பது டிஜிட்டல் கிராப் சர்வே பணியை முற்றிலமாக புறக்கணித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக09-09-2024 அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கருப்பு பட்டைய அணிந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறியும் செவிசாய்க்காத தமிழக அரசை கண்டித்து19 -09- 24 அன்று அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால்30- 09- 2024 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என சூளுரைத்த தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு…

Related Articles

Back to top button
Close
Close