Others
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.. அரசு புது அறிவிப்பு
இலவச பஸ் பாஸ் வழங்க ஏதுவாக எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்கள் விவரங்களை சரிபார்த்து அனுப்பும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இலவச பஸ் பாஸ் இந்தாண்டில் எமிஸ் தளத்தில் உள்ள விவரம் மூலமே வழங்கப்பட இருப்பதாகவும், அதற்கான பணி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.