fbpx
Others

மயான கொள்ளை திருவிழாவுக்கு நெருக்கடி கொடுக்கும் உதவி ஆய்வாளர்..


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பெரிய தண்டு காரன் தெருவை சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் இந்த மனுவில் கூறியிருப்பதாவது ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவாசை நாளன்று முன்னோர்களை வழிபடவும் அங்காளம்மன் மற்றும் காளியம்மன் வேடமிட்டு புஷ்ப பல்லாக்குகள் தேர்தல் அலங்காரம் செய்து ஆற்காடு பால ஆற்றங்கரைக்கு வருவது பாரம்பரியமாக நடந்து வரும் மரபு ஆகும் இந்த திருவிழாவுக்கு அனுமதி கேட்டு ஆற்காடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் அண்ணாமலை இடம் அனுமதி கேட்டபோதுபல்வேறு நெருக்கடிகளை கொடுத்தார் 25 நபர்களின் ஆதார் அட்டை கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் பாரம்பரிய மேளதாளம் பறை இசை மற்றும் ஒலிபெருக்கி பேனர் வைக்க கூடாது என்றும் எச்சரித்து கட்டுப்பாடு விதிக்கிறார்நான் உங்களுக்கு கூறும் கட்டுப்பாடுகளை ஏற்று திருவிழா செய்ய முடியுமானால் செய் இல்லையென்றால் மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொள் நான் அனுமதி வழங்க மாட்டேன் மீறி நடந்தால் கைது செய்வேன் என்று கண்டிப்புடன் கூறி மிரட்டுகிறார் ஆற்காட்டில் பெருமாள் கோயில் திருவிழா நடைபெற்றது சுமார் 60 அடி உயர தேர் அலங்காரம் செய்யப்பட்டு பவனி ஊர்வலம் நடைபெற்றது அதற்கு எவ்விதமான கட்டுப்பாடும் போலீசார் தரவில்லை மேலும் ஆற்காட்டில் பிற சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு திருவிழாக்கள் நடத்தினர் பேனர் அலங்காரம் காது கிழிக்கும் அளவிற்கு ஒலிபெருக்கிகள் வைத்தனர் கண் கூசும் அளவிற்கு உயரமான மின்விளக்குகள் இப்படி கோலாகலமாகக் கொண்டாடினர் பொதுப் பாதையை ஆக்கிரமித்து குத்தாட்டம் போட்டனர் அந்தத் திருவிழாக்களுக்கு போலீசாரால் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை ஆனால் ஆதிதிராவிடர் பொதுமக்கள் நடத்தும் திருவிழாக்களில் மட்டும் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார் உங்களுக்கெல்லாம் எதற்கு திருவிழா என்று கேள்வி கேட்கிறார் சாதி அடிப்படையில் போலீஸ் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார் இந்த செயல்பாடு என்பது மறைமுகமாக சாதிய உள்நோக்கத்துடன் நடந்து கொள்கிறார் ஆதிதிராவிடர் பொதுமக்கள் நடத்தும் திருவிழாவிற்கு மட்டும் மாற்றான் தாய் பிள்ளை போல் பாகுபாடு காட்டுகிறார்
ஞாயம் கேட்டால் மிரட்டும் தொனியில் பேசுகிறார் காவல்துறை அதிகாரி என்பவர் அனைவருக்கும் சமமானவர் அனைவருக்கும் பொதுவானவர் அண்ணாமலையின் ஒருதலை பட்ச நடவடிக்கை ஏற்புடையதல்ல மாற்று சமூகத்தினர் நடத்தும் திருவிழாக்களுக்கு வழங்கும் உரிமையைப் போல எங்களுக்கும் வழங்க வேண்டும் எனவே எங்களின் பாரம்பரிய திருவிழாவை நடத்த போலீசார் அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் உதவி ஆய்வாளர் அண்ணாமலை மீது உரிய விசாரணை செய்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

Related Articles

Back to top button
Close
Close