fbpx
Others

மனநலம் மற்றும் அமைதிக்கான உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி நிகழ்ச்சி…

உலக மனநல தினத்தை முன்னிட்டு செங்குன்றம் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி, மனநலம் மற்றும் அமைதிக்கான உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.இது கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றது.மன நலன் குறித்தவிழிப்புணர்வைஏற்படுத்த,பிரசாந்த்  மருத்துவமனைகள், நேஷ்னல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சைக்காலாஜி அண்ட் ரிசர்ச், லயன்ஸ் கிளப் ஆஃப் பாடியநல்லூர், சோசியல் ஸ்டார்ஸ், ரெட்ஹில்ஸ் கிங், காவாங்கரை ஸ்டார், தமிழ்சிங்கம் உடன் இணைந்து ஆர்.பி. கோதி ஜெயின் மகளிர் கல்லூரி செங்குன்றம் கூட் ரோடு நேதாஜிசிலை முதல் காமராஜர் சிலை வரை மிக நீளமான மனித சங்கிலியை நடத்தியது.இந்த மனித சங்கிலியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைகோர்த்து கலந்து கொண்டனர்.ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மோ. மகாலட்சுமி தலைமையேற்க நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைக்காலஜி அண்ட் ரிசர்ச் தலைவர் டாக்டர் ஹுஸைன் பாஷா அனைவரையும்வரவேற்றார்.3241ஏமாவட்டஆளுநர்பி.மணிசேகர்,பிரசாந்த்மருத்துவமனை   களின் இயக்குனர் டாக்டர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா ஆகியோர் மனித சங்கிலி நிகழ்வை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட், சைக்காலஜி மருத்துவர் வெங்கடேஷ் மதன்குமார், செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எழிலன், இரட்டை ஏரி குமரன் மருத்துவமனை தலைவர் ஆறுமுகசாமி, இந்தியன் மெடிக்கல் அசோஷியன் தலைவர் என்.எம்.டி. கோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் கா.ஷண்முகசுந்தரம், சென்னை சோசியல் ஸ்டார்ஸ்லயன்ஸ்சங்கநிர்வாகிஎம்.முகம்மதுஅபுபக்கர்ஆகியோர்நிகழ்வைசிறப்பாக  ஒருங்கிணைத்திருந்தனர்.  முடிவில் கிதர் நஸ்ரின் நன்றிகூறினார்.

Related Articles

Back to top button
Close
Close