மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சிறப்பு செய்தி…

2025 வருட காலண்டர் வழங்கும் துவக்க நிகழ்வு மற்றும் டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம்.மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் 2025 ஆண்டு காலண்டர்கள் வழங்கும் துவக்க நிகழ்ச்சியுடன், டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.நிறுவன தலைவர் ரா.சம்பத்குமார் அவர்கள் தலைமையில்,தலைமை சட்ட ஆலோசகர் T.வைரவநாதன் MABL அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில்,.தலைமை ஆலோசனை குழு உறுப்பினர் S.சுகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.கடந்த வாரம் 10 நபர்கள் உடல் தானம் முன்பதிவு செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும்,அதிகளவு உறுப்பினர்களை டிரஸ்டில் இணைத்து அதன் மூலம்இரத்த தானம் உட்பட ஏனைய உதவிகளை கிடைத்திடவும் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டதுமுன்னதாக, டெல்டா மண்டல மேலிட ஒருங்கிணைப்பாளர் திருமதி.ட.ஜோதிலதா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.2025ம் ஆண்டு முதல் காலண்டரை தலைமை சட்ட ஆலோசகர் T.வைரவ நாதன் அவர்கள் வெளியிட, அதனைவணிக பேரவை மாநில இணை செயலாளர்G. அய்யாபிள்ளை அவர்கள் பெற்றுக்கொண்டார்.தொடக்க நிகழ்ச்சியாகஆதரவற்றமூதாட்டிஒருவருக்குகுளிர்காலபோர்வைவழங்கப்பட்டது.தற்போது அறக்கட்டளையின் சார்பாக பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலையோரங்களில் வசிக்க கூடிய ஆதரவற்றவர்களுக்கு குளிர்கால பெட்ஷிட்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.மாநில ஒருங்கிணைப்பாளர் பொருள்வை I. கண்ணுவாப்பா அவர்கள் நன்றிரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில், உடல் தானசேவைப்பிரிவின்மாநிலஒருங்கிணைப்பாளர் K.ராஜேந்திரன், விவசாய சேவைப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் K.V.செல்வராஜ், அரசு நலத்திட்ட சேவைப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் P.சாக்ரடீஸ்,தகவல் தொழில்நுட்ப மாநில ஒருங்கிணைப்பாளர் பாலு @ K. பாலசுப்பிரமணியன் தலைமை ஆலோசனை குழு உறுப்பினர் S.ஆனந்தன்,நல்லடக்கம் சேவைப் பிரிவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் R.ஜம்புகேசன் ,ஆம்புலன்ஸ் சேவைப்பிரிவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் K.சுந்தரமூர்த்தி,நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் U.வீராசாமி , மாவட்ட பொருளாளர் G.மணிவண்ணன், தனியார் ஆம்புலன்ஸ் சேவை பிரிவின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் NDR.கண்ணன், நாகை மாவட்ட செய்தி தொடர்பாளர் P.சம்பத்,காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்K.தட்சிணாமூர்த்தி,டெல்டா மண்டல அட்மின் D. மணிகண்டன், தலைமை ஆசிரியர் ஜோசப் ராஜ்,நாகை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் R.மகேஷ் , தலைஞாயிறு E.நக்கீரன், ஜி..அய்யா பிள்ளை, நாகை நகர நிர்வாகி N.சுப்பிரமணியன் , P. ரவி சாமி, அஜி பாஷா, S.மணிவாசகம்,J.விஜயகுமார் உட்பட நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..