தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பலர் சென்னையில் ரகசியமாக முகாமிட்டு வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதிமுக – பாஜக கூட்டணியின் கோரிக்கையின் பெயரில் இவர்கள் சென்னையில் களமிறக்கப்பட்டுஇருக்கலாம்என்றுகூறப்படுகிறது. ஏற்கனவேஆளும்திமுகஅரசு,விரைவில்நடைபெறவுள்ளசட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. உளவுத்துறை மூலம் கருத்துக்கணிப்பு நடத்தி, கட்சியின் தேர்தல் உத்திகளை வலுப்படுத்தத்திட்டமிட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்புகள், திமுகவின் வெற்றி வாய்ப்புகளைஅதிகரிக்கஉதவும்,அத்துடன்பிரச்சாரங்களைச்சிறப்பாகவடிவமைக்கவும், மக்களுக்குச் சரியான வாக்குறுதிகளை வழங்கவும் துணைபுரியும்.இந்த ஆய்வின் முடிவுகள், திமுகவின் தேர்தல் வியூகங்களுக்கு வழிகாட்டி, வலுவான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் உதவும். இந்தப் பணிகளுக்காக, உளவுத்துறை விரைவில் களமிறங்க உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது என்பது பற்றிய துல்லியமானரிப்போர்ட்வழங்குவதற்காக சென்னையில்மத்தியஉளவுத்துறைஅதிகாரிகள்முகாமிட்டுஉள்ளதாககூறப்படுகிறது. இதேவேளையில், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் தனது உளவுத்துறை மூலம் 5 கட்டங்களாகக் கருத்துக்கணிப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. திமுக வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவல்படி, இந்தக் கருத்துக்கணிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன.தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமன எடப்பாடி கே.பழனிசாமி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, தூத்துக்குடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் மந்திரிக்களுடன் மோடியைச் சந்தித்தார். அப்போது தனிப்பட்ட சந்திப்பு எதுவும்நடைபெறவில்லை.இந்தச் சூழலில்தான் எடப்பாடி பழனிசாமிக்கும் மோடிக்கும் இடையே 10 நிமிடங்கள் தனிப்பட்ட உரையாடல் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொலைபேசியில் சில முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அத்துடன், திமுக மந்திரிகள் மீதானவழக்குகளைத்தீவிரப்படுத்தவேண்டும்என்றும்அவர்மோடியிடம்வலியுறுத்தியுள்ளார்.குறிப்பாக, மூன்று திமுக மந்திரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். திமுகவுக்கு எதிராக வியூகங்களை வகுக்க மத்திய உளவுத்துறையின் அறிக்கை தேவை என்றும் அவர் மோடியிடம் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதன்பிறகேமத்தியஉளவுத்துறை அதிகாரிகள்சென்னைக்குரகசியமாககளம்இறக்கப்பட்டுள்ளதாகதகவல்கள்வெளியாகியிருக்கிறது.சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஆளும் கட்சிகள் உளவுத்துறைமூலம்கருத்துக்கணிப்புகளை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். இதன்மூலம், தங்களுக்குச் சாதகமான தொகுதிகள், பலமான இடங்கள், கூட்டணிக் கட்சிகளுக்குச் சாதகமான பகுதிகள் மற்றும் பலவீனமான இடங்கள் குறித்து அவை ஆய்வு செய்யும்.ஒவ்வொரு கட்டக் கருத்துக்கணிப்பின் முடிவுகளின் அடிப்படையில், வலுவான வேட்பாளர் யார், எந்த வாக்குறுதிகளை அளித்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் ஆராயப்படும். இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு, திமுக மற்றும் அதிமுகவின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படும். இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள், வரவிருக்கும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திமுகவுக்கு உதவும்.இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தலுக்குத் தேவையான உத்திகளை வகுப்பதற்கும், எந்த வாக்குறுதிகளை அளித்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதையும் ஆய்வு செய்வதற்கும் திமுகவுக்கு உதவும். இதன்மூலம், தேர்தல் பிரச்சாரங்களைச் சிறப்பாக வடிவமைக்க முடியும்.கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, வாக்குறுதிகளைத் திட்டமிடுவது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். ஆளும் கட்சி உளவுத்துறை மூலம் நடத்தும் இந்தக் கருத்துக்கணிப்புகள், மற்ற கணிப்புகளைக் காட்டிலும் துல்லியமாக இருக்கும். இவை உண்மையான கள நிலவரத்தை வெளிப்படுத்தும் என்பதால், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் இவை முக்கிய கருவியாகப் பயன்படும்.