fbpx
Others

மதுரை-மருதுபாண்டியர் சிலை உயர்கோபுர மின்விளக்கு எரியாத அவலநிலை….?

தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரையில் தெப்பக்குளம் அருகில் உயர் மின் கோபுரம் பழுதாகி நீண்ட நாட்கள் ஆகியும் சரிசெய்ய முன் வராத மாநகராட்சி நிர்வாகத்தினரின் அவலநிலை !!! மதுரை மாவட்டம், மதுரையில் உள்ளதெப்பக்குளம்
அருகில் மருதுபாண்டியர் சிலை உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாகவே எரியவில்லை….. கண்டுகொள்ளாத மின்வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும், மின்சாரம் தடைபடும் நாட்களில் மரங்களை வெட்டும் மின் ஊழியர்கள் மற்றும் மாநகராட்சியும் ஏன் இதை சரி செய்ய முன்வருவதில்லை…? இதற்கு பக்கத்தில் காவல்நிலையமும் உள்ளது . மேலும் இந்த பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும்பகுதி! இந்த மின் விளக்குகள் எரியாததால், அதிக திருட்டு மற்றும் வழிபறிகள் அதிகம் நடைபெற கூடிய இடம் ஆகும் என்பது குறிப்பிடதக்கது ஆகவே இந்த மின் உயர் கோபுர விளக்கை உடனடியாக எரிய வைக்க உரிய போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்த பகுதியிலுள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்….. இவற்றின் மீது உடனடியாக மாநகராட்சி நிர்வாகமும் மின்சாரத் துறை நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா ??? ………………………………… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், தேசிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close