மதுரை–இளம்பெண் கொடுத்த வரதட்சணை புகார்…
மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த இளம்பெண் கொடுத்த வரதட்சணை புகாரில், தலைமறைவாக உள்ள காவலர் மற்றும் அவரது தந்தை காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.தமிழகத்தில் வரதட்சணை பெயரில் நடக்கும் வன்கொடுமைகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், வரதட்சணை கொடுமைகளை தடுக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்தவரே, இந்த கொடுமையை அரங்கேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த தங்கப்பிரியா எனும் இளம் பெண்ணுக்கும், மதுரை அப்பன் திருப்பதியை சேர்ந்த காவலர் பூபாலன் என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பின்னர், மணப்பெண் வீட்டில் சொன்ன அளவுக்கு நகை போடவில்லை என்று தொடர்ந்துபிரச்சனைஏற்பட்டுவந்திருக்கிறது.குறிப்பாகவரதட்சனையை காரணம் காட்டி தங்கப் பிரியா மீது குடும்பத்தினர் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம்தங்கப்பிரியாமீதானதாக்குதல்உச்சத்தைதொட்டிருக்கிறது. கடுமையான தாக்குதல் காரணமாக மருத்துவமனையில் தங்கப் பிரியா சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார். இதனையடுத்து அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக உள்ள கணவர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக உள்ள அவரது தந்தை செந்தில்குமரன், பூபாலனின் தாய் விஜயா, தங்கை அனிதா என 4 பேர் மீது புகார்கொடுக்கப்பட்டிருக்கிறது.திருமணத்தின்போது 60 சவரன் அளவுக்கு தங்க நகை போட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆனால்இன்னமும்வரதட்சனை வேண்டும் என்று கேட்டு தன் மீது பூபாலன் மற்றும் அவரதுகுடும்பத்தினர்தொடர்ந்துதாக்குதல் நடத்தினார்கள் என்றும் தங்கப்பிரியாபுகார்கொடுத்திருக்கிறார்.புகாரையடுத்து5பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகளை
அமைத்திருக்கின்றனர்.இதற்கிடையில், காவலர் பூபாலன் மற்றும் அவரது தங்கை அனிதா பேசிக்கொண்டதாக சொல்லப்படும் ஆடியோ ஒன்றுவெளியாகியுள்ளது.அதில்,தான்எப்படிமனைவிதங்கப்பிரியாவைதாக்கினேன்என்பதுகுறித்துபூபாலன்விளக்கியுள்ளார்.இதைகேட்டுதங்கைஅனிதாசிரிக்க,இருவரும்அதைகுற்றம்என்றுகருதாமல்விவாதித்திருக்கிறார்கள். தான் அடித்ததில் தங்கை பிரியாவின் கழுத்து, வாய், முகம் உள்ளிட்டவற்றில் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பூபாலன் கூறியிருக்கிறார். இதில் பூபாலனின் தந்தை மற்றும் தாய் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. சோஷியல் மீடியாக்களில் இந்த ஆடியோ பரவலாகபகிரப்பட்டநிலையில்,தற்போது4பேரையும்பிடிக்கதனிப்படைஅமைக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரில் சில நாட்களுக்கு முன்னர் ரிதன்யா எனும் புதிதாக திருமணமானஇளம்பெண் வரதட்சணைகொடுமைகாரணமாகதற்கொலைசெய்துக்கொண்டசம்பவம்பெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியிருந்தது.இதுதொடர்பானவிவாதங்கள்இன்னும்குறையாதநிலையில்,தற்போதுமீண்டும்வரதட்சணைபிரச்சனைவெளியில்வந்திருக்கிறது.பெரியாரின்கொள்கை களை வழிகாட்டியாக கொண்டு இயங்கும் இரு பெரும் திராவிடக் கட்சிகள்தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன. இருப்பினும் இன்னும் தமிழ் மண்ணில், பெரியார் மண்ணில் வரதட்சணை கொடுமையை முடிவுக்கு கொண்டு வராமல் இருப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.