மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்த சிறப்பு செய்தி…
காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு.
நிலம் எடுப்பு அறிவிப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 765 நாட்களாக போராடி வரும் கிராம மக்கள். ஏகனாபுரத்தில் நில எடுப்பு அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டதால், எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியல் செய்தனர்
சென்னை போரூர் ஏரியில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு.
அம்பத்தூரில் காணாமல் போனவர் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு என தகவல்.
அம்பத்தூரில் காணாமல் போன கூரியர் டெலிவரி செய்யும் இளைஞர் பாண்டியன் சடலமாக மீட்பு என தகவல்.கடன் தொல்லையால் பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.. நெல்லை ஆட்சியர்– அலுவலகத்தில், பிளேடால் கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு.கொக்கிரகுளத்தை சேர்ந்த அருண்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆட்சியர் அலுவலக வாசலில் ரகளை .
திருந்தி வாழும் தன் மீது, பொய் வழக்கு போடுவதாக கூறி போலீசாருடன் வாக்குவாதம்.மீண்டும் பெண்கள் கழுத்தில் செயினை அறுத்து உங்களை அலைய விடவா என போலீசாரிடம் கேட்டு கதறியபடி வாக்குவாதம்.ரகளையில் ஈடுபட்ட அருண்குமாரை அழைத்து சென்று பாளையங்கோட்டை போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் உஞ்சனை பகுதியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகள்.திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்து.சாலையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்துகள்… உயிர் சேதம் இல்லை.வேகத்தடை அமைத்து சாலையில் தடுப்புகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..மதுரை காவல் நிலையத்தில் புகார் தர வந்தவரிடம் 32 சவரன் நகை வாங்கிக் கொண்டு மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விவாகரத்து புகாரில் திருமங்கலம் காவல் ஆய்வாளர் கீதா, பறிமுதல் செய்த 32 சவரன் நகைகளை ஒப்படைக்காததால் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம்: கடலில் மாயமான மீனவர் வெள்ளைச்சாமியை மீட்கக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதிச் சீட்டு அலுவலகம் முன்பு மீன்பிடி தொழிலாளர்கள், உறவினர்கள் போராட்டம். கடலில் மூழ்கி உயிரிழந்த எமரிட் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் தரக் கோரியும் போராட்டம். ஆழ்கடலில் வீசிய சூறைக்காற்றால் விசைப்படகு மூழ்கியதில் 2 மீனவர்கள் மாயமாகினர். ராமநாதபுரம்
சாயல்குடி அருகே பனைமரங்களை வெட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி அருகே நரிப்பையூர், குதிரைமொழி, 5ஏக்கர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன… விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர், அருகே மலையடிவாரப் பகுதிக்கு தினமும் வரும் காட்டுயானையால் பரபரப்பு நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில் புலிகள், கரடிகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த இரண்டு மாதமாக காலை, மாலை நேரங்களில் மலை உச்சியில் இருந்து யானைகள் கூட்டமாக செண்பகத்தோப்பு அடிவாரத்திற்கு படையெடுக்கின்றன. இதனால் விவசாயிகள் அச்சம்…கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே பெண் கிராம நிர்வாக அலுவலரிடமும் காவலரிடமும் தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வெங்கடேச பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம்: வாழப்பாடி அருகே அதிமுக கிளை செயலாளர் ரவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக கிளை செயலாளர் ரவி (50) உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். ரவி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.