fbpx
Others

மகாராஷ்டிராவில் அஜித் பவார் ஆதரவாளர்கள் கண்ணீருடன் அஞ்சலி…..

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு ajit pawar maharashtra plane crash மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். சரத்பவார் தோற்றுவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அவரிடம் இருந்தே கைப்பற்றிய அஜித் பவார், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.12 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கு அடுத்த மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அஜித் பவார், புனே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாராமதி பகுதியில் நடைபெற இருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள தனி விமானத்தில் சென்றார். வி.எஸ்.ஆர். நிறுவனத்துக்கு சொந்தமான லியர்ஜெட் 45′ என்ற சிறிய ரக விமானத்தில் அவர் நேற்று காலை 8.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டார். புறப்பட்ட 15 நிமிடங்களில் இந்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் அஜித் பவாருடன் பயணித்த 5 பேரும் உடல் கருகி பலியாகினர். மகாராஷ்டிரா மட்டுமின்றி நாட்டையே இந்த விமான விபத்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அஜித் பவாரின் திடீர் மறைவு மகாராஷ்டிரா மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதி சோகத்தில் மூழ்கியது. அஜித் பவாரின் மறைவை ஒட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.விமான விபத்தில்உடல்கள்சிதறியதால்,அவரதுகைக்கடிகாரத்தைவைத்தேஉடல்அடையாளம்காணப்பட்டது.அஜித்பவார்உடல்பிரேதபரிசோதனைக்குபிறகுநேற்றுமாலை5மணியளவில்பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணிக்கு பாராமதியில் நடைபெற உள்ளது. இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இறுதி சடங்கு நிகழ்வில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

Related Articles

Back to top button
Close
Close