fbpx
Others

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை—–எடப்பாடியின் நிலை என்ன?

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றியதில் எடப்பாடியின் நிலை என்ன?” என்று கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:–பச்சைத்துண்டு போட்டுக் கொண்டுபச்சைத்துரோகம்செய்பவருக்கு,மீண்டும்விவசாயிகள்கண்ணில்தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற் றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டுஆதரவு தரப்போகிறாரா?#ThreeFarmLaws, #CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகி றாரா திருவாளர் பழனிசாமி?#MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித்திணிப்பைஎதிர்த்துவென்றபேரறிஞர்அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை ADMK எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா?  உங்கள்தலைவிஅம்மையார்ஜெயலலிதாஅவர்கள்இதற்குஒப்புக்கொண்டிருப்பாரா? அ.தி.மு.க. என்றபெயர் எதற்கு?வறுமையைஒழித்தசாதனைக்குத்தண்டனையாக  தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்று போகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்?இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு?நான் கேட்கவில்லை; தமிழ் நாட்டு மக்கள் கேட்கிறார்கள்! இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close