fbpx
Others

போலி பத்திர பதிவு விவகாரம்–உயர் நீதிமன்றம் உத்தரவு..

போலி பத்திரப்பதிவுகளை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும்வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவு 77-ஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.தமிழகத்தில் போலியாகவும், முறைகேடாகவும் பதியப்படும் பத்திரப் பதிவுகள் குறித்து புகார்செய்தால் அதை விசாரித்து குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரமிருந்தால் அவற்றை மாவட்டப் பதிவாளரே ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கி தமிழக அரசு பத்திரப்பதிவு சட்டத்தில் 77-ஏ என்ற பிரிவையும், மாவட்டப் பதிவாளரின் ரத்து முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 77-பி என்ற பிரிவையும் சேர்த்து கடந்த 2022-ம் ஆண்டு சட்டதிருத்தம் கொண்டு வந்தது.

இந்த சட்டதிருத்தத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும்ஆயிரக்கணக்கான பத்திரப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர்கள் ரத்து செய்தனர். இதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 77-ஏ ஐ எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்குகள்தொடர்ந்திருந்தனர்.இந்தவழக்குகள்மீதானவிசாரணைநீதிபதிகள்  எஸ்.எஸ்.சுந்தர்,என்.செந்தில்குமார்ஆகியோர்அடங்கியஅமர்வில்நடைபெற்றது.அப்போதுமனுதாரர்கள்தரப்பில்மூத்தவழக்கறிஞர்கள் என்.ஜோதி, ஸ்ரீநாத் ஸ்ரீதேவன்,ராஜாகலிபுல்லா,ஆர்.ஸ்ரீனிவாஸ்உள்ளிட்டபலர்ஆஜராகிவாதிட்டதாவது:தமிழகஅரசின்அந்தசட்டப்பிரிவு77ஏசட்டவிரோதமானது.இதுநீதிமன்றத்தின்அதிகாரத்தையேபறித்துமாவட்டப்பதிவாளர்களின்கையில்கொடுப்பதுபோல்உள்ளது.ஒருபத்திரம்போலியானது,மோசடியானது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது. இருதரப்பிலும் ஆதாரப்பூர்வமாக விரிவான விசாரணை நடத்தி,அந்தப் பத்திரப்பதிவு செல்லுமா,செல்லாதா என்பதை சட்டப்பூர்வமாக முடிவு செய்ய நீதிமன்றம் உள்ளது.இந்தசட்டப்பிரிவால் மாவட்டப்பதிவாளர்கள்தன்னிச்சையாகசெயல்படும்சூழல்உள்ளது.அதுமட்டுமின்றிபத்திரப்பதிவுத்துறையில்அதிகப்படியானலஞ்சலாவண்யத்துக்கும்வழிவகுத்துள்ளது.இதனால்நேர்மையானமுறையில்பத்திரப்பதிவுமேற்கொள்வோருக்கும்தேவையற்றஇடையூறுகள்ஏற்பட்டுள்ளது.எனவேஇந்தசட்டப்பிரிவைரத்துசெய்யவேண்டும்.இவ்வாறுவாதிட்டனர்.இதற்குஅரசுதரப்பில்கடும்ஆட்சேபம்தெரிவிக்கப்பட்டு,நீதிமன்றத்தின்சுமையைக்குறைக்கும்விதமாகவேஇவ்வாறுசட்டதிருத்தம்கொண்டுவரப்பட்டுள்ளதாகவாதிடப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்த தீர்ப்பு விவரம் வருமாறு: பத்திரப்பதிவு சட்டத்தில் பத்திரங்களை ரத்து செய்யும் வகையி்ல் மாவட்டப் பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி கொண்டு வரப்பட்டுள்ள சட்டப்பிரிவு 77-ஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே அதை ரத்து செய்கிறோம். அந்த சட்டப்பிரிவின் கீழ் மாவட்டப் பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close