போத்தனூர் பகுதியில் டாஸ்மாக்கடைகள் ஆக்கிரமிப்பு….
டாஸ்மாக் கடைகள் ஆக்கிரமிப்பில் போத்தனூர் பகுதி : கடைகளை குறைக்க நடவடிக்கை கோரும் பொதுமக்கள் ! கோவை, மார்., 09 :கோவை மாவட்டம், போத்தனூர் பகுதியில் 98 மற்றும் 99 ஆகிய வார்டுகளில் மொத்தமாக 9 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. (கடை எண் : 1756, 1755, 2232, 1841, 1769, 1746, 2231). இதில் 7 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளும், தனியார் பார்களும், இரண்டு FL2 எனப்படும் தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகின்றன. (கடை அனுமதி எண்: 35/2023-2024 மற்றும் 180/2025-2026) இந்நிலையில் மது விற்பனை செய்யும் டாஸ்மார்க் கடைகளில் மது வாங்க வரும் நபர்கள் அதனைபொதுவெளியில்வைத்துமதுஅருந்திச்செல்கின்றனர்.இதனால்


அவ்வழியாகசெல்லும்
பெண்கள்மற்றும்குழந்தைகள்பாதுகாப்புகேள்விக்குறியாகும் நிலை உள்ளது. மேலும் FL2 எனப்படும் மனமகிழ் மன்றங்கள் முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் மது விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மதுக்கூடங்களில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது. இந்த டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் 9 மருத்துவமனைகளும் , 8 அரசு மற்றும்தனியார்பள்ளிகளும், 1 தனியார் கல்லூரியும், மத வழிபாட்டுத் தலங்களும் செயல்பட்டு வருகின்றன. அரசன் தியேட்டர் பகுதியில் மட்டும் 3 டாஸ்மாக் கடைகள் பத்து அடி தொலைவில் அமைந்துள்ளது. இது போன்று பள்ளிக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகளால் பள்ளி மாணவர்கள் நலன் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த டாஸ்மாக் அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், அவசர ஊர்திகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் அரசுக்கு புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவு படி பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ள பகுதிகளில் மதுபான கடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இதுபோன்றஉச்சநீதிமன்றம் உத்தரவை கோவை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் பின்பற்றாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது என்றும், தமிழக மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசுக்கு அக்கறை இல்லை என்றும் பலர் கூறுகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.