fbpx
Others

போதையைவிட– தலைவிரித்தாடுகிறது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு…?

தமிழ்நாடு – தேனி மாவட்டம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது…. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை படுஜோர்  கண்டு கொள்ளாமல் இருக்கின்றது மாவட்ட காவல்துறை ??? தமிழ்நாட்டில் இந்த லாட்டரி சீட்டு மோகத்தினால் கவரப்பட்டு வறுமையில் வாடி தற்கொலைக்கு, தள்ளப்பட்டு, ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்ட போது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால், தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை மிகவும் களைகட்டுதலோடு, தேனி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடக்கிறது ! இவற்றிற்கு ஆளும் கட்சி துணையோடு, தேனி மாவட்ட காவல்துறையும் உடந்தையா ? அல்லது இவர்கள் ஆளுங் கட்சியின் முக்கிய பிரமுகரா ?… இல்லை இவர் இன்னொரு ஜாபர் ஷெரீப்பா? ஏன் இந்த விற்பனையை தேனி மாவட்ட ஆட்சியரோ …. அல்லது மாவட்ட காவல் துறையினரோ இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்? போதாத குறைக்கு ஆன்லைன் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையும், படுஜோர்….. இவற்றையெல்லாம் பார்க்கும்போது யார் எதைச் செய்தாலும் நமக்கென்ன…. நமக்கு கிடைக்க வேண்டிய மாமூல் கிடைத்துவிடுகிறதல்லவா என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனரா? ஒன்றுமே புரியவில்லை…….பல குடும்பங்கள் இவற்றால் சீரழிந்து நிர்க்கதியாகி தெருவில் நிற்பதற்கு முன்பாக! உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை நிர்வாகம், இணைந்து இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா ? அல்லது காற்றில் பறக்க விட்டு விடுவார்களா என பாதிக்கப்பட்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கின்றனர்???………… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close