Others
போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற சிறப்பு செய்தி.
14-12- 2024 ம் தேதியில் போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான திரு . எம். செய்யது சுலைமான் உசேன், எல்.எல். எம்., தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமர்வு நீதிபதியாக குற்றவியல் நீதிமன்ற நடுவர் திரு சி. பழனிவேல் ராஜன் எம். எல்., அவர்களும் மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு .ஏ. முகமது காசிம், பி. ஏ.,பி.,எல்., அவர்களும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர் . திரு எஸ் .ராதாகிருஷ்ணன் எல்.எல்.பி., “ஆ”பட்டியல் வழக்கறிஞரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் மொத்தம் 157 வழக்குகள் முடிவு பெற்றன. முடிவுற்ற தொகை ரூபாய் 39,98,157ஆகும். இந்நிகழ்ச்சியை எம். சையது அப்தாகிர் ,பி.எல்.வி.ஏற்பாடு செய்தார்.