பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களைச் சந்திக்க விஜய் திட்டம்…..
சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவல நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர போலீஸார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதேபோல, டிச.6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நினைவு தினத்தையொட்டி, அடுத்து வரும் நாட்களில் மாநகரம் முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.எனவே, விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டும் என்பதால், விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு டிசம்பர் 4-ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்ததற்கான காரணங்கள்: சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபன் தலைமையிலான வழக்கறிஞர் அணியினர், வரும் டிசம்பர் 4-ம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய மூன்று பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி சேலம் மாநகரக் காவல் ஆணையாளரிடம் மனு அளித்திருந்தனர்.காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் இந்த மனுவை உடனடியாகப்பரிசீலித்தனர்.அனுமதிமறுக்கப்பட்டதற்கான முக்கியக் காரணங்களாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டவை:டிசம்பர் 4-ம் தேதி திருவண்ணாமலையில்கார்த்திகைதீபத்திருவிழாவைஒட்டிநடைபெறும்கிரிவலநிகழ்ச்சிக்குச் சேலம்மாநகரகாவல்துறையினர்பாதுகாப்புப்பணிக்காகஅனுப்பிவைக்கப்படுவார்கள்.டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் என்பதால், அதை ஒட்டி வரும் நாட்களிலும் மாநகரம் முழுவதும் காவலர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த முக்கியப் பணிகளின் காரணமாக, டிசம்பர் 4-ம் தேதி அன்று தவெக பொதுக்கூட்டத்திற்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்குவது கடினம் என்று தெரிவிக்கப்பட்டது.பொதுக்கூட்டத்திற்கு எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் விவரங்கள் விண்ணப்பத்தில்போதுமானதாகஇல்லைஎன்றும்காவல்துறைசுட்டிக்காட்டியுள்ளது.இதையடுத்து, டிசம்பர் 4-ம் தேதிக்குப் பதில் வேறொரு நாளில் தேர்தல் பிரச்சாரத் தேதியை மாற்றி வழங்குமாறு காவல்துறை அதிகாரிகள் தவெக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தனர். எனவே, விஜய் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மற்றொரு தேதியைத் தேர்வு செய்து புதிய விண்ணப்பத்தை நான்கு வாரங்களுக்கு முன்னதாகச் சமர்ப்பிக்கவாய்ப்புள்ளது.கடந்தசெப்டம்பர்மாதம்தனதுமாநிலம்தழுவியசுற்றுப்பயணத்தைத் தொடங்கிய விஜய், கரூரில் நடந்த கூட்ட நெரிசலின் காரணமாகப் பிரச்சாரத்தைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. சாலைப் பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இனி பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.