fbpx
Others

பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி.

மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 22-ம் தேதி மறைந்த எஸ்றா சற்குணத்தின் உடல் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.இதுதொடர்பாகவெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:  உடல் நலக்குறைவால் 22.9.2024 அன்று காலமான மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் பேராயர் திரு. எஸ்றா சற்குணம் (வயது 86) அவர்களது உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.திரு.எஸ்றா சற்குணம் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தனது இறுதி நாள் வரை தொடர்ந்து சேவை ஆற்றி வந்துள்ளார்கள்.இன்று (26.9.2024) சென்னை, கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close