பெரியகுளம் தேசிய மக்கள் நீதிமன்றம்—சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் பெரியகுளம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது இதில் பெரியகுளம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி எஸ். சமீனா அவர்களும் பெரியகுளம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதி எஸ். சந்திரசேகர் அவர்களும் நீதித்துறை நடுவர் நீதிபதி கே. கமலநாதன் அவர்களும் வட்ட சட்டப்பணிகள் வழக்கறிஞர். எம். சிவசுப்பிரமணியன் வழக்கறிஞர் சங்கதலைவர். கே. ஜி. பாலாஜி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர் இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், உள்பட மொத்தம் 226 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 1.18.39.350/= ரூபாய் ஒரு கோடியை பதினெட்டு லட்சத்து முப்பத்து ஒன்பதாயிரத்து முன்னுற்றி ஐம்பது தீர்வு காணப்பட்டது இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பெரியகுளம் வட்ட சட்டப்பணிகள் குழு செய்திருந்தது.