fbpx
Others

புழலேரியில் இருந்து விநாடிக்கு 200கன அடி உபரிநீர் திறப்பு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரிஉள்ளது. இதன் முழு கொள்ளவு3,300 மில்லியன் கனஅடி ஆகும். தற்போதைய நீர்மட்டம் சுமார்
3005 கன அடி உள்ளது21 அடி நீர்மட்டம் கொண்ட புழல் ஏரி தற்போது 19 அடியாக உயர்ந்து உள்ளது..வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.மேலும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டிய தால் பூண்டி ஏரி திறக்கப்பட்டு கால்வாய் வழியாகஉபரிநீரானதுபுழல்எரிக்குவந்துகொண்டிருக்கிறது.இதனால் புழல் ஏரி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.புழல் ஏரி அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து தற்போது விநாடிக்கு 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.உபரி நீர் கிராண்ட் லயன், சாமியார் மடம்,வடகரை, வடபெரும் பாக்கம், அரியலூர், மணலி, எண்ணூர் வழியாக வங்க கடலில் கலக்கிறது.எனவே கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர். மு. பிரதாப் சார்பில் அறிவுறுத்தப்
பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close