Others
புனித வழித்துணை மாத கோவில் ஆண்டுப் பெருவிழா-சிறப்புசெய்தி
தேனி மாவட்டம் கம்பம் லோயர்கேம் அருகே குமுளி மலைச்சாலையில் அமைந்துள்ள புனித வழித்துணை மாத கோவில் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு கம்பம் பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் லோயர் கேம்பில் இருந்து கத்தோலிக்க கிருஸ்துவர்கள் ஊர்வலமாக சென்று நிறைவாக வழித்துணை மாதா கோவில் சென்றடைந்து வழித்துணை மாதாவின் ஆண்டு பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள் பிரான்சிஸ் சேவியர் மற்றும் அருட்தந்தை பிரித்குமார் மற்றும் அருட்தந்தையர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி இறையாசி வழங்கினார்கள் இந்த ஆண்டு .பெருவிழா சிறப்பு திருப்பலியில் கம்பம், கூடலூர், அனுமந்தன் பட்டி, உத்தமபாளையம், உட்பட பல ஊர்களில் இருந்து ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர்.