புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற கட்டிடம் குப்பை கிடங்காக மாறி துர்நாற்றம்…..?

குப்பை கிடங்காக மாறி துர்நாற்றம் வீசும் மேல் புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற கட்டிடம்
ராணிப்பேட்டை மாவட்டம்
திமிரி ஊராட்சி ஒன்றியம் மேல் புதுப்பாக்கம் ஊராட்சி ஆறாவது வார்டு பகுதியில் ஊராட்சி மன்றம் கட்டிடம் செயல்பட்டு வருகின்றது இக்கட்டத்தின் உள் அறைகள் தூய்மையாற்ற நிலையில் குப்பைகள் சிதறி கிடக்கின்றன உடைந்து போன தேவையற்ற பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன சிலந்திப் பூச்சிகள் கூடுகட்டி வாழ்கின்றன அறைகளில் மோசமான துர்நாற்றம் வீசுகிறதுகட்டிடத்திற்கு சுண்ணாம்பு மற்றும் பெயிண்ட் அடிக்காமல் பழைய கட்டிடம் போல் காட்சியளிக்கிறது மேலும் கட்டிட வளாகத்தில் குப்பை வண்டிகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மொத்தத்தில் கட்டிடமே சுகாதாரமற்ற நிலையில் உள்ளதுஇக்கட்டிடத்தை தூய்மைப்படுத்தி சுண்ணாம்பு மட்டும் பெயிண்ட் அடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதே அக்கிராம பொது மக்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது நடவடிக்கை எடுப்பார்களா? துறை சார்ந்தஅதிகாரிகள்…