புதுடெல்லி–புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு இல்ல வளாகம்–முதல்-அமைச்சர்ஆய்வு.
புதுடெல்லி, சாணக்யபுரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டடங்களின் கட்டுமானப்பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தின் பழைய கட்டிடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் , 26.7.2024 அன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில்புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து அங்கு கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இப்புதிய கட்டிடம் மிக முக்கிய பிரமுகர்தொகுதி,விருந்தினர்மாளிகைதொகுதிமற்றும்அலுவலர்கள்குடியிருப்புத்தொகுதி ஆகியவற்றைஉள்ளடக்கி,3 அடித்தளங்கள்,தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும்,மொத்தம் 3 லட்சம்சதுரஅடிபரப்பளவில்கட்டப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.