fbpx
Others

பிரச்சாரத்துக்கு முன்பாக புஸ்ஸி ஆனந்த்மீது வழக்கு …?

TVK to Legally Challenge Case Filed Against General Secretary Bussy Anand Says CTR Nirmalkumarதவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி சென்றபோது போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்டட வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் துணைபொதுச்செயலாளர்சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் முதல் முறையாக போட்டியிட தயாராகி வருகிறது. அக்கட்சித் தலைவர் விஜய் இரண்டு மாநாடுகளை நடத்தியுள்ளார். மதுரை மாநாட்டில் பேசிய விஜய், விரைவில் மக்களை சந்திக்க வருவேன் என்று கூறியிருந்தார்.இந்நிலையில், “உங்கள் விஜய்.. வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க தவெக தலைமை முடிவெடுத்தது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வரும் 13ஆம் தேதி தன்னுடைய முதல் அரசியல் பிரச்சாரத்தைத் தொடங்க திட்டமிட்டார் விஜய். ஒரே நாளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களில் பரப்புரை செய்ய விஜய் திட்டமிட்டார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலகம் ரவுண்டானா, மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை ஆகிய வழியாக வந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் உரையாற்றும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்க தவெகபொதுச்செயலாளர்என்.ஆனந்த்சென்னையில் இருந்து அனுமதி கோரும் கடிதத்துடன் திருச்சி விமான நிலையத்துக்கு கடந்த 6 ஆம் தேதி வந்துஜீப் டிரைவரை வசைபாடிய காவல் உதவி ஆணையர்.. வைரலாகும் வீடியோ.. நடவடிக்கை  எடுக்குமா காவல்துறை? | Deputy Commissioner of Police insults jeep driver  for sleeping in Trichy TNN இறங்கினார்.அப்போது அங்கு கூடியிருந்த தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அந்த அனுமதி கோரும் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் சாலையில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அப்போது புஸ்ஸி ஆனந்துடன் வந்த கட்சி நிர்வாகிகள், கார்களை சாலையில் குறுக்கு நெடுக்கே நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்றதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.மேலும், போலீசாருடன் தவெக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8) புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போக்குவரத்து இடையூறு, காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், உதவி ஆணையரிடம் மிரட்டலாக வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, திருச்சி காவல் ஆணையரை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் உரையாற்றும் வகையில் பிரச்சார கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தார். ஆனால் ஆணையர் அனுமதி வழங்கவில்லை. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய இடம். எனவே இங்கு பிரச்சாரக் கூட்டம் நடத்தினால் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். வேறு இடம் தேர்வு செய்து சொல்லுங்கள் எனத் தெரிவித்தார். இந்நிலையில், தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களது கழகத் தலைவருக்கு மக்களிடையே ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் செல்வாக்கு மற்றும் ஆதரவை பார்த்து பயந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது திமுக அரசு.கடந்த வாரம் எங்கள் தலைவர் அண்ணன் விஜய் மக்கள் சந்திப்பிற்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்க சென்ற கழக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சியில் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. எத்தனை தடைகள் வந்தாலும் அதை அனைத்தையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close