பலபுகார்தெரிவித்தும்தெருநாய்கள் தொல்லைகுறைந்தபாடில்லை…..WHY….?
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சாலையில் நடந்து சென்றாலே கடிக்கப் பாய்வதாகவும் ஒரு சில தொடர்ந்து மாநகராட்சிகளுக்கு புகார் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். எனினும் இந்த சம்பவம் குறைந்தபாடில்லை.இந்த நிலையில் தான் காஞ்சிபுரத்தில் தெரு நாய் கடித்ததில் 9 ஆம் வகுப்பு மாணவன் பலியாகி உள்ளான். காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சின்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான பாஸ்கரின் மகன் சபரிவாசன் (வயது 14). சபரிவாசன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி சென்று விட்டு வீட்டில் இருக்கும் நேரம் நண்பர்களுடன் அப்பகுதியில் விளையாடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புவீட்டின்வெளியேநண்பர்களுடன்சபரிவாசன்விளையாடிகொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்துள்ளது. இதில் சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனினும் நாய் கடித்தது குறித்து பெற்றோரிடம் எதுவும் கூறாமல் இருந்திருக்கிறான். நாய் கடித்ததை சொன்னால் பெற்றோரிடம்
அடிப்பார்கள் என பயந்துபோய் அதை சொல்லாமலேயே மறைத்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிவாசனின் செயல்களில் சற்று மாறுபாடு தெரிந்தது.
வழக்கம் போல் இல்லாமல் அவனது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. இதையடுத்து தந்தை பாஸ்கர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சபரிவாசனை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு ரேபிஸ் நோய் முற்றி இருந்தது தெரியவந்தது. மேலும் சிறுவனும் நாய் போன்று செயல்பட்டதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காததால் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சபரிவாசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர் திட்டுவார்கள் என்று நினைத்து நாய் கடித்ததை மறைத்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.