பலத்த பாதுகாப்புடன் திருப்பதியில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம்..
ஆந்திரா முதல்வராக 4-வது முறையாக பதவியேற்ற தெலுங்குதேசம் கட்சித் தலைவர்
சந்திரபாபு நாயுடு திருப்பதியில் இன்று தமது குடும்பத்தினருடன் பலத்த பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தார். ஆந்திரா மாநில சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆந்திராவிலும் ஜெகன் மோகனிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. சரித்திரத்தில் இடம் பிடித்த 5 லோக்சபா சபாநாயகர்கள்.. யார் யார்? ஏன் தெரியுமா? ஆந்திரா முதல்வராக 4-வது முறையாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவியேற்றார். சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆந்திரா முதல்வராக மீண்டும் பதவியேற்ற உடனேயே சந்திரபாபு நாயுடு முதலில் திருமலைக்கு நேற்று இரவு குடும்பத்தினருடன் வருகை தந்தார். ரேணிகுண்டா விமான நிலையத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உற்சாக
வரவேற்பளிக்கப்பட்டது.பின்னர்திருமலைகாயத்ரிவிருந்தினர்மாளிகையில்குடும்பத்தினருடன் சந்திரபாபு நாயுடு ஓய்வெடுத்தார். இதனையடுத்து இன்று காலையில் திருப்பதியில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். திருமலை திருப்பதிக்கு சந்திரபாபு நாயுடு வருகை தந்ததால் மிகவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2003-ம் ஆண்டு முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு வருகை தந்து கொண்டிருந்தார். அப்போது அலிபிரியில் சந்திரபாபு நாயுடு சென்ற பாதையில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை திடீரென வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் சந்திரபாபு நாயுடு உயிர் பிழைத்தார். சந்திரபாபு நாயுடுவின் உயிரைக் குறிவைத்து மொத்தம் 17 கண்ணிவெடிகளை மாவோயிஸ்டுகள் அங்கு புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.