பத்திரிகையாளர்கள்,ஊடகப் பணியாளர்கள்பணிப் பாதுகாப்பை அரசுஉறுதி செய்ய வேண்டும்.

பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் கடமையைச் செய்யும் ஊடகப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இந்தியாவில் இத்தகைய ஊடகப் பணியாளர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். 2023ல் இந்தியா முழுவதும் அரசு அமைப்புகள், அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளால் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 226 பேர் குறிவைக்கப்பட்டதாகவும் பிரஸ் கவுன்சிலின் அறிக்கை தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மட்டுமின்றி துணிச்சலான பத்திரிகையாளர்களின் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துகிறது.
உலக பத்திரிகை சுதந்திரத்தில் 180 நாடுகளில் இந்தியா 159 வது இடத்தைப் பிடித்துள்ளது என்கிற புள்ளிவிவரங்களை இந்த செய்தியுடன் சேர்த்து படித்தால், இங்கு நிலவும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பின்மையை அறிந்துகொள்ள முடியும். –யாஸ்மின் ஃபரூக்கி, தேசிய பொதுச்செயலாளர், SDPI கட்சி.