பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் மற்றும் ஒற்றுமை பொங்கல் விழா..




தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஒற்றுமை பொங்கல் விழா மாநிலத் தலைவர் எஸ்.சரவணன் தலைமையில் 10.01.2025 அன்று சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.பத்திரிகையாளர்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் ஒற்றுமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.சுப்ரமணிய ஆசான் கலைக்கூடம் (பொன்னேரி) குழுவினரின் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம், வால் சண்டை, சுருள் விளையாட்டு, தீப்பந்தம் போன்ற தமிழரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.அரசு மலர் நிருபர் பலகுரல் மன்னன் எல். ஆர்.ராஜகோபால் அவர்களின் பலகுரல் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் கலந்துக் கொண்ட 300க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு, நெய், முந்திரி, திராட்சை ஏலக்காய், உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள், சங்கத் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள் உட்பட ஏரளமான பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துக் கொண்டனர்.சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்தியநாராயணன், மாநில பொருளாளர் காமேஷ் கண்ணன், மாநில துணைத் தலைவர்கள் ராஜன், அறிவழகன், இணை செயலாளர் கிருஷ்ணவேணி, துணை செயலாளர் வினோத், அமைப்பு செயலாளர் முகுந்தன், தலைமை நிலைய செயலாளர் சரவணன், செய்தி தொடர்பாளர் லோகேஷ்வரராவ், சட்ட ஆலோசகர் ஹரி கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் நவீன்மணி, திருப்பூர் சிவகுமார், செந்தமிழ்செல்வி, எம்.எல்.வீரா, மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தி, ஜீவானந்தம், தினேஷ், பாலசுப்ரமணியன், ஜெயராமன், ஆனந்த், மகேஷ், முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பொங்கல் விழாவை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.என்றும் பத்திரிகையாளர் நலனில்..எஸ்.சரவனன்தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் 9840035480