fbpx
Others

*பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட காவல்துறையினர்……

*பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட காவல்துறையினர். !**தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கண்டனம்*

சென்னையில் ஏழாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதிநேர ஆசிரியர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் இழுத்துச்சென்று கைது செய்தனர். இதனை படம்பிடித்த பத்திரிகையாளர்களை காவல்துறையினர் மிரட்டியதுடன் பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர். காவல்துறையின் அடாவடி செயலை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.பத்திரிகையாளர்களை தாக்குவதும், மிரட்டுவதும், அவமதிப்பு செய்வதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பத்திரிகையாளர்களின் மீதான அடக்குமுறைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை பத்திரிகையாளர்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனி இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் அவர்களும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.

தோழமையுடன்..எஸ்.சரவணன்தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480

 

Related Articles

Back to top button
Close
Close