பட்டாவை நிரந்தர வீட்டுமனை பட்டாவாக பதிவு செய்து தரக்கோரி….

கோவை மாவட்டம், பேரூர் தாலுகா, வடவள்ளி கிராமம், வார்டு 37 உட்பட்ட நஞ்சப்பன் சாலை, மருதாபுரம் பகுதியில் கடந்த ஐந்து தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு 1978 ஆண்டு 60 மேற்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா வழங்கப்பட்டு 48 ஆண்டுகள் ஆகியும், பட்டா பதிவு செய்யப்படாத பட்டாவாக இருப்பதாக கூறப்படுகிறது, இங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக, 100 ஆண்டுகளுக்கு முன், 150 அடி கிணறு அமைத்து அரசால் வழங்கப்பட்டுள்ளது. அரசால் 20 சென்டில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சில வீடுகளுக்கு பசுமை வீடுகள் கட்ட அரசால் சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அவினாசி கூட்டுறவு வங்கி கடன் உதவி வழங்கியுள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவியுடன் மின்சாரம், குடிநீர் இணைப்பு, சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்தி வந்துள்ளனர். கூலி வேலை செய்து வரும் இப்பகுதி மக்களின் குழந்தைகள் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு தங்களின் வீட்டுமனை பட்டாவை நிரந்தர பட்டா வழங்கி, பத்திர பதிவு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். கோவை மாவட்ட நிருபர் க. அஜித் குமார்