fbpx
Others

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியின் நிர்வாகச் சீர்கேடு……?

கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடைப்பட்ட பாலமாக விளங்குபவை பேரூராட்சிகள். ஒரு பகுதியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய இந்த உள்ளாட்சி அமைப்புகள், சமீபகாலமாகப் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றன. இது பொதுமக்களின் அன்றாட வாழ்வைப் பெரிதும் பாதிக்கிறது.முக்கிய நிர்வாகச் சீர்கேடுகளானகுடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகள்
முறையான திட்டமிடல் இல்லாததால் குடிநீர் விநியோகத்தில் பெரும் குளறுபடிகள் ஏற்படுகின்றன. பல பேரூராட்சிகளில் குப்பைகளைச் சேகரிப்பதிலும், அவற்றை முறையாக மேலாண்மை செய்வதிலும் மெத்தனப் போக்கு காணப்படுகிறது. சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடுகள் உருவாகின்றன.வெளிப்படைத்தன்மை இல்லாததும், தரமற்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதும் நிர்வாகச் சீர்கேட்டிற்குச் சான்றாகும்.பேரூராட்சிகளில் போதிய பணியாளர்கள் இல்லாதது ஒருபுறம் இருந்தாலும், இருக்கும் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிகளை முடிக்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பது பெரும் குறையாக உள்ளது. வரி வசூலில் காட்டும் ஆர்வம், மக்கள் குறைகளைத் தீர்ப்பதில் காட்டப்படுவதில்லைநிர்வாகச் சீர்கேடுகளால் வரி செலுத்தும் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன. இது அரசின் மீதான நம்பிக்கையைக் குறைப்பதோடு, அப்பகுதியின் வளர்ச்சியையும் முடக்குகிறது. நோய்த்தொற்றுகள் பரவவும், இது காரணமாகிவிடுகிறது. சரி தலைப்பிற்கு வருவோம்…இராதாபுரம் தொகுதி வள்ளியூர் பேரூராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட வேம்படி தெருவில் இடிந்து கிடந்த வாறுகாலை சரி செய்ய (கழிவுநீர் கால்வாயை) பேரூராட்சியில் பலமுறை முறையிட்டும் சீர் செய்து தராத சூழ்நிலையில்விரக்தியடைந்த இந்த வார்டில் உள்ள சமூக ஆர்வலரும்,வள்ளியூர் பசுமை இயக்க செயலாளரும், ரஜினிமன்றஒன்றியசெயலாளரும், “சட்டகளஞ்சியம் மாத இதழ் கௌரவ ஆலோசகருமான”A.சண்முகம் அவர்களின்சொந்த ஏற்பாட்டில்ரூ15,000 சொந்த செலவில் கழிவுநீர் கால்வாய் சரிசெய்து கட்டிமுடித்துள்ளார். அதற்கு வார்டுபொதுமக்கள், வள்ளியூர் பசுமை இயக்கம், பிளட் டோனர் வள்ளியூர் சிவந்த கரங்கள், சட்டக் களஞ்சியம் மாத இதழ் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். மேலும் இவர் கொரோனா கால கட்டத்தில் இராதாபுரம் தொகுதி மக்களுக்கு தான் பெரிய வசதி படைத்தவராக இல்லாவிட்டாலும் இருப்பதைக் கொண்டு ஏராளமான உதவிகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மக்களாட்சியின் அடிப்படை அங்கமான பேரூராட்சிகள் செம்மையாகச் செயல்பட்டால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ச்சி பெறும். அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சுயநலமின்றிச் செயல்பட்டு, நிர்வாகச் சீர்கேடுகளைக் களைந்தால் மட்டுமே பேரூராட்சிகள் ‘முன்மாதிரியாக மாறும்.
புலனாய்வுக் குழு

Related Articles

Back to top button
Close
Close