fbpx
Others

நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு காவல்துறை மரியாதை–முதலமைச்சர்உத்தரவு…

பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் நேரில் ...சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் நீதிபதி எம்.எஸ் ... பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள்தலைவருமானதிரு.எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்ததமிழ்நாடுமுதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின்அவர்கள்ஆணையிட்டுள்ளார். அதில்சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதியரசர் திரு.எம்.எஸ்.ஜனார்த்தனம் (வயது 89) உடல்நலக் குறைவால் இன்று (06.06.2025) இயற்கை எய்தினார்.நீதியரசர் திரு. எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள். 1988 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர். 2015 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவரதுபரிந்துரையின்அடிப்படையில்தான்தமிழகத்தில்இஸ்லாமியர்கள்இடஒதுக்கீடு,கிறித்தவர்கள்இடஒதுக்கீடு,அருந்ததியர்இட  ஒதுக்கீடுஆகியவைநடைமுறைப்படுத்தப்பட்டன. சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர். நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு சமூக நீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அன்னார் நீதி துறைக்கும். மாநிலத்திற்கும் ஆற்றிய சேவையை போற்றும்வகையில்அவரதுஇறுதிநிகழ்வுகாவல்துறைமரியாதையுடன்நடைபெறும்என்றுதெரிவித்துக்கொள்கிறேன்.”இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close