நீடாமங்கலம்–மின் நுகர்வோர் வசூல் மையம் நகரில் அமைக்க கோரிக்கை….

நீடாமங்கலம் ஜூன் 16
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜா செல்வராஜ் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்று கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . கூட்டத்தில் நீடாமங்கலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கட்டணம் செலுத்தும் இடம் நீடாமங்கலம் பகுதியில் இயங்கி வந்தது அது தற்பொழுது பழைய நீடாமங்கலம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று மின் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர் பொதுமக்கள் நலன் கருதி மின் கட்டணம் செலுத்தும் மையத்தினை நீடாமங்கலம் நகரப் பகுதியில் அமைத்திட பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை அனுப்பிட தீர்மானிக்கப்பட்டது .2024 25 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டது .இயக்க பதிவு எண்ணை புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுநீடாமங்கலம் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பிட தீர்மானிக்கப்பட்டது.இந்த ஆண்டில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு செய்வது என தீர்மானிக்கப்பட்டதுஅகமதாபாத் விமான விபத்தில் பலியான மக்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . முன்னதாக செயலாளர் ஜெகதீஷ் பாபு வரவேற்றார். துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி உரையாற்றினார் .