fbpx
Others

நீடாமங்கலம் —குடியரசு தினத்தில் 2025 மரக்கன்றுகள் வழங்க திட்டம் ..

 
பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்கும் பயற்சி நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தால் அளிக்கப்பட்டுஇயற்கை உரம், புங்கன்விதைகள், பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் 250 விதைகள் விதைக்கப்பட்டது. நீடாமங்கலம், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி, பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி , வடகர வயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி விதை, இயற்கை உரம், பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு 1000 விதைகள் நடப்பட்டது. இதனை தொடர்ந்து மணிமேகலை நடுநிலைப் பள்ளியில் 250 புங்கன் விதைகள் நடப்பட்டது. மாணவர்கள் வளர்த்த 2025 மரக்கன்றுகள் வரும் குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளதாக ஆசிரியர் ஜெகதீஸ் பாபு தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close