நீடாமங்கலம் ஒன்றியம் பெரம்பூர் கிளையின் 24 வது மாநாடு…
17.9.2024. நீடாமங்கலம் ஒன்றியம் பெரம்பூர் கிளையின் 24 வது மாநாடு கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது மாநாட்டின் கொடியை மூத்த தோழர் பி. கலியபெருமாள் ஏற்றினார் .அஞ்சலி தீர்மானம்.மோகனசுந்தரம் வாசித்தார். மாநாட்டின் துவக்க உரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி ஆற்றினார் மாநாட்டை வாழ்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் முருகேஷ் பேசினார் ஒன்றிய செயலாளர் டி. ஜான்கென்னடி நிறைவுரையாற்றினார் தீர்மானங்கள் 1.கண்ணம்பாடி தலைப்பு பாசன வாய்க்காலே தூர் வார வேண்டும் 2. கோரையாற்று பாலம் அருகில் ரிட்டன் வால்வு கட்ட வேண்டும் அப்பாலம் அருகே ஏற்கனவே இருந்த படித்துறை பழுதடைந்துள்ளதால் அதை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் 3. கண்ணம்பாடி கட்டை ரோடு வசிக்கும் கிராம மக்களுக்கு படிதுரை அமைத்து தர வேண்டும் 4. எங்கள் பகுதியில் மின்மாற்றி அமைத்து பெரிய மதுவில் இருந்து கோரையார் பாலம் வரை மின்விளக்கு அமைத்து தர வேண்டும் 5. கண்ணம்பாடி வடகர வயல் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது புதிய கிளை செயலாளர் எம்.குருமூர்த்தி நன்றி கூறினார்.