Others
நீடாமங்கலம்–அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்க்கு மடி கணினி வழங்கும் திட்டம்..
நீடாமங்கலம் அருகே உள்ள நகர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்த மடி கணினி வழங்கும் திட்டத்தை175 மாணவர்களுக்கு வழங்கி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர்சோம.செந்தமிழ்ச்செல்வன்முதல்வருக்குநன்றிதெரிவித்துஉரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி நா.ரவிச்சந்திரன், நகர் சக்கரவர்த்தி, நிர்வாகிகள் தனபால், ராமையன், சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பயிற்சியாளர் சு.சண்முகநாதன் நன்றி கூறினார்.