fbpx
Others

நீடாமங்கலத்தில் நடந்த அறிவியல் இயக்க பயிற்ச்சி…

நீடாமங்கலம் ஆகஸ்ட் 18 நீடாமங்கலத்தில் நடந்த அறிவியல்,இயக்க பயிற்ச்சியில் பல்நோக்கு சேவை இயக்கம் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி.நீடாமங்கலம் தனியார் நீலன் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட அமைப்பு இரண்டு நாள்பயிற்சி முகாம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் நீலன் அசோகன் தலைமையில் சமூக சேவையில் இயக்கத்தின் பங்களிப்பு எனும் தலைப்பில் கல்வியாளர் பேச்சாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.விழாவில்மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் செயலாளர் ஜெகதீஷ் பாபு தலைமையில் நடத்தப்பட்டது. மஞ்சள் பையின் அவசியம் பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.விழாவில் செய்தியாளர் தேவதாஸ், பேராசிரியர் லெனின் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் வானவில் மன்ற கருத்தாளர்கள், பல்நோக்கு சேவை இயக்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் மேலும் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு தொலைநோக்கி மூலம் இரவு வான்நோக்குதல்நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் 80 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வான் நிகழ்வுநிகழ்ச்சியை கண்டு களித்தனர் அறிவியல் இயக்க மாவட்ட இணை செயலாளர் பிளாட்டோ விளக்கம் அளித்தார்.. முன்னதாக மாவட்ட இணை செயலாளர் பொன்முடி அனைவரையும்வரவேற்றார்.முடிவில்நல்லாசிரியர்சந்திராநன்றிஉரையாற்றினார்  படம்.நீடாமங்கலத்தில் நடந்த அறிவியல் இயக்க பயிற்ச்சியில் பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close