Others
நாளை நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்….
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு திமுகவின் தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., உள்ளிட்ட 13 தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆளுங்கட்சியான திமுகவின் தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும்உள்ளபெரும்பாலானபேருந்துகள்நாளைஇயக்கப்படாதுஎனத்தெரிகிறது.அதேநேரம் அதிமுகவின்அண்ணாதொழிற்சங்கம்இந்தவேலைநிறுத்தத்தில்பங்கேற்கவில்லை.எனவே, அந்ததொழிற்சங்கபணியாளர்கள்வழக்கம்போல்பணிக்குவருவார்கள்.இதனால்,குறைந்த எண்ணிக்கையிலானபேருந்துகள்இயக்கப்படலாம்எனக்கூறப்படுகிறது.சி.ஐ.டி.யு.வில் ஆட்டோதொழிலாளர்கள்அதிகளவில்அங்கம்வகிப்பதால்பெரும்பாலானஆட்டோக்கள் ஓடுவதற்குவாய்ப்பில்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காததால், கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும். நாடு தழுவிய இந்த போராட்டத்தில் வங்கித் துறையும், காப்பீட்டு துறையும் இணைவதாக அறிவித்துள்ளது.