Others
நல்லூர் ஊராட்சி, சோலையம்மன்நகர்திருக்கோயில்-சிறப்பு செய்தி

திருவள்ளூர்மாவட்டம்,சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, சோலையம்மன் நகரில் உள்ள நல்லூர் சீரடி சாய்பாபா திருக்கோயிலில் மகா வாராகி, மன்னாதிசுவரர், பச்சையம்மன், நந்தீஸ்வரர், புரான பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையும் நடந்து வருகிறது.கோயிலுக்கு சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் சகோதரர். வி. சத்திய நாராயணன் கெய்க்வாட் தரிசனம் செய்ய வருகை தந்தார் ஆலய நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு, பூரணகும்பமரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.சாய் கண்ணன் முன்னிலை வகிக்க ஜோதி பிரகாஷ் ஜி, அருள் செல்வர், தனபால், பிரம்மஸ்ரீ, புவனகிரி சித்தர் ரவி ஜி ஏற்பாட்டை சிறப்பாக செய்தார்கள்.சுற்று வட்டார பகுதியில் இருந்துஏராளமானபக்தர்கள்திருக்கோவிலுக்கு வருகை தந்து ஆண்டவன் அருள் பெற்று செல்கின்றனர்.