fbpx
Others

நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா….

திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பவர் நல்லக்கண்ணு: மு.க.ஸ்டாலின் பெருமிதம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்,சுதந்திரபோராட்டவீரர்ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்றுநடைபெற்றது. அப்போது நல்லக்கண்ணு கட்சி கொடி ஏற்றினார்.இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு நேரில் வாழ்த்து கூறி..பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கி கவுரவித்தார்.நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை; அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். . பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லக்கண்ணுவுக்கும் நூற்றாண்டு, இப்படிஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடுபவர் நல்லக்கண்ணு. அமைதியாக -ஆழமாக சிந்தித்துபேசக்கூடிவர்நல்லக்கண்ணு.
திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக விளங்குபவர் நல்லக்கண்ணு. திமுக ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கும் நல்லக்கண்ணு உறுதுணையாக விளங்கிகொண்டிருக்கிறார். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என நல்லகண்ணு அய்யாவைக் கேட்டுக் கொள்கிறேன். 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறும் அளவுக்கு திமுக கூட்டணி அமைந்திருக்கிறது. கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல; மதச்சார்பின்மை கூட்டணி, நிரந்தர கூட்டணியாகஇருக்கிறோம் இவ்வாறு தமிழக முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின்கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close