நடிகர் மதன் பாபு { 71 வயது } காலமானார் ..
மதன் பாப், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். அவரது தனித்துவமான சிரிப்பு, உடல் மொழி
ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 1984ஆம் ஆண்டு பாலு மகேந்திராவின் ‘நீங்கள் கேட்டவை’ படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், இயக்குநர் கே. பாலச்சந்தரின் ‘வானமே எல்லை’ படத்தில் ‘மதன் பாப்’ என்ற பெயரைப் பெற்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து, தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களால் புகழ் பெற்றார். மதன் பாப், நடிப்பு மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும் பன்முகத் திறமை கொண்டவர். ‘அசத்தப் போவது யாரு’ உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பணியாற்றிய இவர்,இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரஹ்மானுடனும் நெருக்கமாக பணியாற்றியவர். மதன் பாப்பின் மியூசிக் ட்ரூப் உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றியுள்ளார்.மதன் பாப்பின் மனைவி சுசிலா ஒரு பாடகி, மேலும் இவர்களுக்கு ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். மதன்பாபுவின் தந்தை பெயர் சுப்பிரமணியம். சுதந்திரப் போராட்டத்து பங்கெடுத்தவர். ‘மதுரை மித்ரன்’ என்ற பெயரில் பத்திரை நடத்தினார். முன்னாள் முத்வர் காமராஜரின் நண்பர் ஆவார். மன்பாபுவின் அம்மா பெயர் பொன்னம்மாள். இவர் கர்நாடக சங்கீதம் கற்றவர். பாட்டு வகுப்பு எடுத்து வந்தார். மதன் பாபுவின் மனைவி பெயர் சுசிலா. இவர் பாடகி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். மதன் பாபுவின் உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
. இன்று காலை முதல், மதன் பாப் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல், அவரது உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.