fbpx
Others

நடிகர் டெல்லி கணேஷ்க்கு தேசியக் கொடி போர்த்தி விமானப்படை இறுதி மரியாதை!

Delhi Ganesh: நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம்... தேசியக் கொடி போர்த்தி விமானப்படை இறுதி மரியாதை!

டிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் நடிகர் டெல்லி கணேஷ்.காமெடி, குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும், அதனை திறம்பட செய்வதில் கை தேர்ந்தவர் டெல்லி கணேஷ். 40 ஆண்டுகளாக திரைத்துறையில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தூக்கத்திலேயே உயிரிழந்தார். சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, சக நடிகர், நடிகைகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து டெல்லி கணேஷின் உடல் சென்னை நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து நெசப்பாக்கம்மின்மயானத்துக்குடெல்லிகணேஷ்உடல்ஊர்வலமாகஎடுத்துச்செல்லப்பட்டது.  பின்னர், மின்மயானத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய பின், டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது.அதற்கு முன்னதாக, நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. விமானப் படை மற்றும் தேசியக் கொடியை டெல்லி கணேஷ் உடலுக்கு போர்த்தி மரியாதை செலுத்தினர்.திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி கணேஷ், இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.திருநெல்வேலி மாவட்டம் வளநாடு கிராமத்தில் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிறந்த டெல்லி கணேஷ் ஆரம்ப காலத்தில் டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதன்பின் தேர்வெழுதி விமானப்படையில் இணைந்து பத்தாண்டு காலம் பணியாற்றினார். அப்போது, வீரர்கள் முகாம்களில் நாடகம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், அந்த நாடகங்களில் டெல்லி கணேஷ் நடித்து வந்தார்.அதன் பிறகு தமிழ்நாடு திரும்பிய டெல்லி கணேஷ், 1976 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close