fbpx
Others

தொகுதிகளை பிரித்து கொடுக்க திமுக திட்டம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் தூத்துக்குடி வருகை : முழு விவரம் இதோ...  - Dinasuvaduதமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கடந்த 20 வருடங்களாக நீடித்து வருகிறது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் தனித்து போட்டியிட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள், நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றியை குவித்தது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சி திடீரென ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி தர வேண்டும் என திமுகவிடம் டிமான்ட் வைத்தது.அடுத்ததாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திமுகவிற்கு எதிராகவும், தவெகவிற்கு ஆதரவாகவும் கருத்துகளை கூறி வந்தனர். ஒரு கட்டத்தில் தவெகவுடன் கூட்டணி வைக்கவும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு கட்டாயம் தேவை என தொடர்ந்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் திமுகவிற்கு எதிராகவும் கருத்துகளை கூறி வந்தார். எனவே ராகுல் காந்தியின் தூண்டுதலின் பேரில் தான் திமுகவை மாணிக்கம் தாகூர் நெருக்கடி கொடுப்பதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழட்டி விடும் வகையில் திமுக திட்டமிட்டுள்ளது.ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த திமுக, காங்கிரஸ் மேலிடத்தில் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் இதனை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை திமுக உருவாக்க முடிவெடுத்தது. அந்த வகையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. எனவே இந்த கட்சிக்கு குறைந்தது 8 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த முறை திமுக கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகள் இணைந்துள்ளது. ஆனால் திமுக குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி கூட்டணியில் நீடித்தால் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. அல்லது திமுக கூட்டணியில் இருந்து வெளியே செல்லும் பட்சத்தில் அந்த 25 தொகுதிகளை மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்கவும் கூடுதல் தொகுதியில் திமுக போட்டியிடவும்  திட்டமிட்டுள்ளது.   திமுக கூட்டணி உத்தேசபட்டியல்;

திமுக- 167     காங்கிரஸ்-25       தேமுதிக -7
விசிக- 7   மதிமுக-6   ம.கம்யூனிஸ்ட் – 6    இ.கம்யூனிஸ்ட்- 6     முஸ்லிம் லீக்- 2
மமக- 2     மநீம-2     எஸ்டிபிஐ-1      கொங்கு- 3

Related Articles

Back to top button
Close
Close