தேர்தல் முடிவுக்குமுன் 2 மாதத்திற்குஎதுவும் செய்ய வேண்டாம். ஏன் தெரியுமா?
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது. 2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு
இப்போது ஐந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது. பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 3, லடாக்கில் 1, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த கட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி, லக்னோ மற்றும் கைசர்கஞ்ச்; பீகாரில் சரண்; மற்றும் அனைத்து ஆறு மும்பை மக்களவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவில் கல்யாண் ஆகிய தொகுதிகள் ஆகும்.தொங்கு சட்டசபை; இந்த லோக்சபா தேர்தலுக்கு பின் பல்வேறு பிரச்சனைகள் வரலாம் என்று அரசியல் நிபுணர்கள் பலர் கணித்து உள்ளனர். 1. தொங்கு சட்டசபை உருவாகலாம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். 2, இன்னும் சிலர் காங்கிரஸ் கட்சியின் இந்திய கூட்டணி ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வெளியே இருக்கும் சில கட்சிகளின் ஆதரவு தேவை. 3, பாஜக ஆட்சிக்கு வரும். ஆனால் தனிப்பட்ட மெஜாரிட்டி இருக்காது. என்டிஏ மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன்தான் பாஜக ஆட்சி அமைக்கும் என்றெல்லாம் கணிப்புகள் கூறுகின்றன. லோக்சபா தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் செய்த மோடி.. வாரணாசி ஆட்சியர் யார்? எந்த ஊர் தெரியுமா? என்ன நடக்கும்? இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய மார்க்கெட்டில் இருந்து சர்வதேச நிறுவனங்கள் பல வெளியேற தொடங்கி உள்ளன. பல்வேறு நிறுவனங்கள் பல திடீரென மார்க்கெட்டில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளன. 1. இதனால் பல்வேறு நிறுவனங்கள் புதிய பணியாளர்களை எடுப்பதை நிறுத்தலாம். 2. வேலை வாய்ப்புகள் ரிசல்ட் பொறுத்து மாறலாம். வேலை வாய்ப்புகளில் சிக்கல் ஏற்படலாம். 3. முதலீடுகள் சில சமயங்களில் சொதப்பலாம். முக்கியமாக எஸ்ஐபி வகை முதலீடுகளில் லோவர், மிடில் வகை எஸ்ஐபிக்கள் பெரிய அளவில் சொதப்பலாம். 4. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலோ, தொங்கு சட்டசபை உருவானாலோ அது மிகப்பெரிய அளவில் ,மார்க்கெட்டில் ரத்த களறியை ஏற்படுத்தும் . இதனால் பெரிய அளவில் வேலை வாய்ப்பு, முதலீட்டில் பிரச்சனை ஏற்படும். 5. சில முதலீடுகளில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதை எல்லாம் தவிர்க்க வேலை மாறும் திட்டத்தில் இருப்பவர்கள், புதிய தொழில் தொடங்கும் திட்டத்தில் இருப்பவர்கள், பெரிய பெரிய முதலீடுகள் செய்யும் திட்டத்தில் இருப்பவர்கள் 2 மாதத்திற்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.