தேனியில் இரயில் சேவையினை அமல்படுத்த கோரி தனி நபர் போராட்டம் !!!
தமிழ்நாடு , தேனி மாவட்டம், தேனியில் மீட்டர்கேஜ் இருந்த போது வந்து கொண்டு இருந்தது போல் தினமும் நான்கு முறை இரயில் சேவையினை அமல்படுத்த கோரி தனி நபர் போராட்டம் !!! தேனி மாவட்டம், தேனியில் மீட்டர்கேஜ் இருந்த போது வந்து சென்றது போல மீண்டும் அதே போல் ரயில் சேவையை வழங்கும்படியும், இராமேஸ்வரம் டூ மதுரை, மற்றும் தூத்துக்குடி , கோயம்பத்தூர் செல்லும் இரயில்களை போடிநாயக்கனூர் வரை வந்து செல்லுமாறு நீட்டிப்பு செய்ய வேண்டும்…மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் வரை செல்லும் ரயில்களை கூடுதல்களாக மீட்டர் கேஜ் உள்ள போது வந்து சென்ற ரயில் சேவையை அதே நான்கு முறை வந்து சென்றது போலவும் செயல் படுத்திட வேண்டும் என்றும் , இரயில் உபயோகிப்பாளர் சங்கம் மூலமாக பலமுறை போராட்டங்கள் நடத்தி இன்று வரை இது போன்ற திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது…. இவற்றை உடனடியாக மத்திய அரசும், மத்திய இரயில்வே துறை, தேனி பாராளுமன்ற உறுப்பினர், இரயில்வே துறை அதிகாரிகள் இவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் தனிநபர் போராட்டம் செய்த நிகழ்வு……………